பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது தடவையாக இன்று (10) விஜயம் செய்தார்.



பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இரண்டு நிதி நன்கொடைகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர்,அவரது பிள்ளை ஒருவரின் கல்வி நடவடிக்கைக்காக மடிக்கணினி ஒன்றும் வழங்கப்பட்டது.



மறைந்த பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், முற்றிலும் நியாயமான விசாரணையின் மூலம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு பாடுபடும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
திரு.பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் கல்வியை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உதவிகள் தொடர்ந்தும் தன்னால் வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்தார்.










