பிறப்புச் சான்றிதழ்கள் இனி டிஜிட்டல் வடிவில்

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் பிறப்புச் சான்றிதழ்களை தற்போது டிஜிட்டல் வடிவில் வழங்கி வருகிறது.

 

2022 ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகள் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 

இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வருட இறுதியில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

குழந்தை 15 வயதை அடையும் போது, ​​டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பதிவாளர் நாயகத்தின் கருத்தின் பிரகாரம், ஆங்கிலம் , தமிழ் அல்லது சிங்களம், – தமிழ் ஆகிய மொழிகளில் மொழி மாற்றங்களை அனுமதிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles