புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்குள் (தேசிய பாடசாலை) நேற்றிரவு மர்ம நபர்கள் உட்புகுந்துள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலை கலையரங்கின் கூரையை உடைத்தே மர்ம நபர்கள் உட்புகுந்துள்ளனர்.
கொள்ளையடிக்கும் நோக்கில் இவர்கள் வந்தனரா அல்லது இதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் புஸல்லாவ பொலிஸ் நிலையத்துக்கு பாடசாலை நிர்வாகம் அறிவித்ததையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார், கண்டியிலிருந்து மோப்ப நாய்களையும் வரவழைத்து விசாரணை வேட்டையில் இறங்கினர்.
இன்று மாலைவரை மர்ம நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணை வேட்டை தொடர்கின்றது.
பாடசாலை மண்டபத்துக்குள் மர்ம நபர்கள் புகுந்திருந்தாலும், எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை. எனவேதான் வேறு நோக்கம் பற்றியும் விசாரணை திரும்பியுள்ளது.
நிருபர் – பா. திருஞானம்










