புசல்லாவை, நியூபிகொக் தோட்டத்தில் 85 வீத வரவை உறுதிப்படுத்திய 225 தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபா இலாப பங்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 85 வீதத்துக்கும் குறைவான வரவை பதிவுசெய்திருந்த110 தொழிலாளர்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மொத்தமாக 335 தொழிலாளர்களுக்கு இலாப பங்கு பகிரப்பட்டுள்ளது.
2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையான காலப்பகுதிக்கே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின்கீழ்தான் புசல்லாவை, நியூபிகொக் தோட்டம் செயற்படுகின்றது.
தொழிலாளர்களுக்கு இலாப பங்கு வழங்கும் நிகழ்வில், நிவ்பிகொக் தோட்டத்தின் சிரேஷ்ட பொது முகாமையார் செனரத் பாதகும்புர, உதவி முகாமையாளர் கயான் ஆரியதாச மற்றும் தோட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புசல்லாவை பவன்
