புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: அரசாங்கம் உறுதி!

புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இது விடயத்தில் அரசாங்கம் எவ்விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்கு பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.

புதிய அரசமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படும். நாட்டில் இதுவரை இயற்றப்பட்ட அரசமைப்புகளின்போது மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படவில்லை. எம்மால் கொண்டுவரப்படும் அரசமைப்பு மக்கள் அனுமதி கிடைத்ததாக இருக்க வேண்டும். அதற்குரிய பணிகளுக்காகவே மூன்று வருடங்கள் என கால எல்லை குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

கடந்த கால யோசனைகளும் உள்வாங்கப்பட்டு எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதனை செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். சிலவேளை மூன்று வருடங்களுக்கு முன்னர்கூட அது நடக்கலாம்.” – என்றார் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles