புதிய அரசமைப்பை உருவாக்க தெரிவுக்குழு வேண்டும்

” ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளே, புதிய அரசமைப்பை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அரசும் அரசமைப்பு விடயத்தில் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனவே, புதிய அரசமைப்யை இயற்றுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.”

– இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் சார்பில் இந்த கோரிக்கையை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பை இயற்றும் நடவடிக்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது உங்களுக்கும் (சபாநாயகருக்கும்) தெரியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாடும் சட்டத்தரணிகள், புதிய அரசமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 20ஆவது திருத்தச்சட்டமும் இவ்வாறுதான் நிறைவேற்றப்பட்டது. இறுதிவரை எமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி உரையாற்றினார். புதிய அரசமைப்பை வெளியில் தயாரித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பாமல், அந்த பணியை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.

அதேவேளை, 1948 இல் இருந்து இந்நாட்டை அரசுகள் ஆட்சி செய்துள்ளனர். இம்முறைதான் நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles