புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றில் முன்வைப்பு!

புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலமானது ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று சென்றிருந்த பிரதமர் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

” புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னரே சட்டம் நிறைவேற்றப்படும்.

ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு பிறகு ஏப்ரல் 3ஆவது வாரத்தில்தான் நாடாளுமன்றம்கூடும். இதன்போது மேற்படி சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படும்.” – எனவும் பிரதமர் கூறினார்.

Related Articles

Latest Articles