புத்தாண்டில் தேயிலை மரத்துக்கு பூஜை…!

புத்தாண்டையொட்டி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய தமது பணியை ஆரம்பித்துள்ளனர்.

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் , தாம் தேயிலை கொழுந்து பறிக்கும் மரங்களுக்கு மஞ்சள் நீர் தெளித்து பூஜை நடத்தி, நேற்று கொழுந்து கொய்தனர்.

தோட்ட முகாமையாளர்,  உதவி முகாமையாளர்கள்,  வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் வரவேற்பளித்தனர்.

அத்துடன்,  தொழிலாளர்களுக்காக தோட்ட நிர்வாகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ஓய்வு அறையும் திறந்து வைக்கப்பட்டது.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles