புனித செபஸ்தியார் திருச்சொரூபம் உடைப்பு – இருவர் லுணுகலை பொலிஸாரால் கைது!

லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபத்தை தேசப்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் லுணுகலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்ரோட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரும், எல்ரோட் – மாதபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலயத்தின் நுழைவாயில் கதவை நேற்றிரவு உடைத்துக்கொண்டு உள்சென்ற நபர்கள் , ஆலயத்தின் முன்றலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்த புனித செபஸ்தியார்   சிலையை அகற்றி அதனை எல்டராடோ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் கொண்டு சென்று  நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர், நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நிருபர் – ராமு தனராஜ்

Related Articles

Latest Articles