புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளிவரும்?

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

40 பாடசாலைகளில் வினாத்தாள்களைத் திருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்,விரைவில் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடந்து முடிவடைந்துள்ள நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles