புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு குறித்து விசேட விசாரணை

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சட்டவிரோத செயலில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவடைந்த பிறகு, ஒரு சில நிமிடங்களுக்குள் குறித்த வினாத்தாள்கள் வெளியிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்நடவடிக்கைமூலம் பரிட்சையின் இரகசியத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles