‘புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முயற்சி’

” புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசிபெற்றவேளையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சர்வக்கட்சி மாநாட்டில் கூட்டமைப்பு பங்கேற்றதில் உள்நோக்கம் இருக்கின்றது. தற்போதைய நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு கூட்டமைப்பினர் முற்படுகின்றனர். அதாவது புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல்போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெற முற்படுகின்றனர்.

அனுமான் இலங்கையை தீயிட்டு அழித்தார் எனக் கூறப்படுகின்றது. அதுபோலவே அசிங்கமான அமெரிக்கரும் தற்போது நாட்டை அழித்துவருகின்றார். அரசுக்கான பெரும்பான்மையை இல்லாது செய்தால் அவர் அமெரிக்கா ஓடிவிடுவார். – என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles