இறம்பொடை, புலுபீல்ட் தோட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கம் தோட்ட முகாமைத்துவத்திற்கு எதிராக தமது உரிமைகளை கேட்டு தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த வேலை நிறுத்த போராட்டம் இ.தொ.கா வின் தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸின் தவிசாளருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட மேல்மட்ட குழுவினர் தோட்ட நிர்வாக முகாமையாளருடன் முன்னெடுத்த போச்சு வார்த்தையில் சுமுகமான இணக்கப்பாடு எட்டியுள்ளது.
202 தொழிலாளர்களுக்கு சேவைக்கால கொடுப்பனவு , ஈபிஎவ், ஈடிஎவ் போன்ற கொடுப்பனவுகளை புலூம்பீல்ட் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தாமல் இருந்ததால், தோட்டத்தை நிர்வகிப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமை தோன்றியிருந்து.
இதன் காரணமாக கடந்த மூன்று வருட காலமாக தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுவந்தனர்.

இதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிய கொடுப்பனவுகள்
வழங்குவதாக உறுதியளித்த தோட்ட நிர்வாகம், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் அத்தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணியும், தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கவும் இணக்கம் காணப்படடுள்ளது .
எனவே எதிர்வரும் முதலாம் திகதி இருந்து மீண்டும் பணிக்கு திரும்பவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத பாண்டி ராமேஸ்வரன் , பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர் பாரத் அருள்சாமி, குறித்த தோட்டத்தின் தலைவர், தலைவிகள் மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
எனவே எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழமைக்கு தொழிலுக்கு திரும்பும்மாறு தொழிலாளர்களை ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.










