பூண்டுலோயாவிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா, ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர் பூண்டுலோயா நகரின் பல இடங்களுக்கும் சென்றுள்ளார், அவரின் சகோதரர் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் அவருடன் பலர் பயணித்துள்ளனர்.

” ஹெரோ தோட்டம் முழுவதிலும் தொற்று நீக்கிகளை தெளிப்பதோடு நோய் பரவாமல் இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே,  பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடித்து அவதானத்துடன் செயற்படவேண்டும்.” – என்று கொத்மலை பிரதேச சபை தலைவர் சுசந்த தெரிவித்தார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles