கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குப்பைக்குழிகள் உரிய வகையில் பராமரிக்கப்படாமையால் டெங்கு நோய் பரவுவதற்கான சூழல் அதிகரித்துள்ளதாக தோட்டமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த தோட்டம் மஸ்கன்ஸ் எனும் தனியார் கம்பனியின் கீழ் இயங்குவதால் இத்தோட்டத்தை உரியமுறையில் தோட்ட நிர்வாகம் பராமரிக்காத சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் தோட்ட நிர்வாகத்தால் குப்பைகள் கொட்டுவதற்கோ அல்லது கொட்டப்பட்ட குப்பைகளை முறையாக அகற்றுவற்கோ எவ்வித வழிவகைகளையும் செய்யாதிருப்பதால் வீசப்பட்ட குப்பைகளை நிரம்பி கிடப்பதோடு துர்நாற்றமும் வீசத்தொடங்கியுள்ளது.
மேலும் குறித்த குப்பைக்குழியால் நுளம்புகள் அதிகரித்துள்ளதாக தோட்ட மக்கள் குறிப்பிடுவதோடு அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாறி மாறி நிலவுவதால் டெங்கு நுளம்பு பெருகிவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.எனவே தோட்டநிர்வாகம் தலையிட்டு முறையாக குப்பைக்குழியை பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு பூண்டுலோயா மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்










