‘ பூப்பனை தோட்ட மரணங்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை’ – வதந்திகளை நம்ப வேண்டாம்!

நுவரெலியா , கந்தப்பளை – கொங்கோடியா கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 50 வயதுக்கு மேற்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றியதால்தான் இவர்கள் உயிரிழந்தனர் என வதந்திகள் பரவின.

எனினும், மேற்படி மரணங்களுக்கும் – பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டமைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அவை இயங்கை மரணங்களே எனவும் கந்தப்பளை பொது சுகாதார பரிசோதகர் அதிகாரி டப்ளியூ.ஜி.அமில தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவை இயற்கை மரணங்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த மூவரும் சக்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

எனவே, பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள அச்சப்பட வேண்டியதில்லை எனவும், வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிககை எடுக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

டி. சந்ரு

Related Articles

Latest Articles