பூமியில் நேரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் இதற்கமைய பூமியின் நேரம் நாளொன்றுக்கு ஒரு நொடி வீதம் குறைவடையுமெனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமி வெப்பமடைவதுடன், துருவப் பனிக்கட்டிகளும் வேகமாக உருகுகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து, அதன் மூலம் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படுமெனவும், விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு வினாடி மிகவும் குறுகிய காலப்பகுதியான போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துமென்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ள இந்த விடயம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.