பூஸா சிறைக்குள் புதைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள், சிம் அட்டைகள் மீட்பு

அதி பாதுகாப்புடன் கூடிய பூஸா சிறைச்சாலையில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை கையடக்கத் தொலைபேசிகளும் உதிரிப்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சிறைச்சாலையில் ஏ மற்றும் பி பிரிவு பகுதிகளில் மண்ணைத் தோண்டி பூமிக்கடியில் மிகக் கச்சிதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி கையடக்கத் தொலைபேசி மற்றும் உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கண்டெடுக்கப்பட்டவைகளில் ஒரு ஸ்மார்ட் போன் கையடக்கத் தொலைபேசி, சிறு அளவிலான இரண்டு கையடக்கத் தொலைபேசி, நான்கு சிம் கார்ட், ஒரு மெமரி சிப், இரண்டு கையடக்கத் தொலைபேசி சார்ஜர்கள், இரண்டு டேட்டா கேபிள்கள், ஒரு ஹான்ப்ரி உள்ளிட்டவைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles