பெண்ணைப் போல் நீண்ட கூந்தலுடன் சேலை அணிந்து மனித நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து திருடிய நபர் ஒருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், அந்த நபரிடமிருந்து ரைஸ் குக்கர், நீர் இறைக்கும் இயந்திரம், பித்தளை பூச்சாடிகள் மற்றும் பீங்கான் பொருட்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
பெண்ணைப் போல் உடை அணிந்து ஆட்கள் இல்லாத வீடுகளுக்குள் நுழையும் போது , அயலவர்கள் சந்தேகப்படுவதில்லை என பொலிஸாரிடம், அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.










