அமைச்சரவை இன்று நியமனம்!

இலங்கையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள்வதற்குரிய 23 பேரடங்கிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளது.

நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன ஜனாதிபதி வசம் இருக்கும் என தெரியவருகின்றது.

பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளதுடன், விஜித ஹேரத்திடம் வெளிவிவகார அமைச்சு பதவி மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்படவுள்ளார் எனவும், விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சு லால் காந்தவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

 

Related Articles

Latest Articles