” பெருந்தோட்ட மக்களின் உழைப்பால்தான் அந்நிய செலாவணி கிடைக்கிறது – ஆனால் 200 வருடங்களாகியும் துன்பத்தில் இருந்து அவர்கள் விடுபடவில்லை.” – சபையில் சஜித்

” 200 வருடங்களாகியும் மலையக பெருந்தோட்ட மக்கள் துன்ப நிலையில் இருந்து இன்னும் விடுபடவில்லை.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று 27/2 இன்கீழ் விசேட உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பட்டியலிட்டுக்காட்டி உரையாற்றிய சஜித் பிரேமதாச, அம்மக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளையும் சுட்டிக்காட்டினார்.

” பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அந்த தொகை உரிய வகையில் கிடைப்பதில்லை. இது அரசுக்கு தெரியுமா?” எனவும் அவர் வினா எழுப்பினார்.

தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை வைத்துக்கொண்டு அவர்களால் வாழ்க்கைச்செலவை சமாளிக்க முடியாதுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

” மலையக பெருந்தோட்ட சமூகத்தின் உழைப்பால்தான் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. ஆனால் கல்வி, சுகாதார மற்றும் நலன்புரி விடயங்களில் அவர்களுக்கு பல குறைபாடுகள் உள்ளன. 200 வருடங்களாகியும் துன்ப நிலையில் இருந்து அவர்கள் விடுபடவில்லை.” எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles