பெருந்தோட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சதொக மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.










