பசறை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி தோட்ட மக்கள் , பதுளை – பசறை பிரதான வீதியின் ஒரு பகுதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வீதியில் டயர்களை எரித்தும், பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழல் மிகுந்த அரசினை ஆட்சியில் இருந்து விலகுமாறும் , அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் , எரிபொருள் விலையேற்றத்தினை கண்டித்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமு தனராஜா