மஸ்கெலியா, சாமிமலை டீசைட் தோட்டத்துக்கு பேலியாகொடையில் இருந்து வருகை தந்த ஏழு நபர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் கடந்த சில மாதங்களாக பேலியாகொடையில் தொழில் புரிந்து வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ந்து அவ்விடத்தில் தொழிலை மேற்க்கொள்ள முடியாத நிலையில் தமது சொந்த ஊரான டீசைட் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இது குறித்து மஸ்கெலிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மஸ்கெலிய பொது சுகாதார பரிசோதகரால் நேற்று ( 28 ) மாலை அவ்விடத்திற்கு வருகைதந்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சாமிமலை ஞானராஜ்