பொகவந்தலாவை, நோர்வூட், புளியாவத்தை நகரங்களையும் முடக்கவும்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களின் வர்த்தக நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நகர வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான கல்யாணகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

நகரங்களுக்கு வந்து செல்கின்ற மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் நமது நாட்டில் இதுவரை 35 நகரங்களுக்கும் மேற்பட்ட நகரங்களில் வர்த்தக நிலையங்களை வர்த்தகர்கள் மூடியுள்ளனர். இதன் காரணமாக இந்த நகரங்களுக்கு வருகின்ற மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவை, நோர்வூட்,புளியாவத்தை,டின்சின், கெம்பியன் போன்ற நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை முன்னறிவித்தலோடு மூடுவதற்கு இந்த நகரங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

Related Articles

Latest Articles