பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் ஆலயத்தில் ஆடிப்பூரம் ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் அம்மன் சடங்கு நிகழ்வுகளும் விசேட பூஜை வழிபாடுகளும் வெள்ளிக்கிழமை (14.08.2026) வெகுவிமரிசையாக இடம்பெற்றன.

இவ்விழாவை முன்னிட்டு, காலையில் பக்த அடியார்களால் பால்குடப் பவனி எடுத்துவரப்பட்டு அம்பாளுக்குப் பால், தீர்த்த நீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஊர் மக்கள் ஒன்றுதிரண்டு அம்மனுக்கான சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துவந்தனர். பின்னர் அம்பாளுக்கு விசேட அலங்காரம் செய்யப்பட்டு வசந்த மண்டப பூஜைகளும் நடைபெற்றன.

இந்த ஆடிப்பூரம் விசேட பூஜையில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். அத்துடன் வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Related Articles

Latest Articles