பொது கூட்டணி குறித்து சந்திரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக கள்வர்கள் அற்ற கூட்டணியொன்று அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

பொது கூட்டணியொன்று அமைய வாய்ப்புள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றனவே என எழுப்பட்ட கேள்விக்கு,
“ சட்டப்பூர்வமாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது.” – என்றார் சந்திரிக்கா அம்மையார்.

அதேவேளை, இன்னும் ஏழு போயா தினங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles