பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டாலும் அது வெற்றியளிக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இம்முறை நான் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. தேசிய மக்கள் சக்தியுடன் பேச்சு நடத்தப்பட்டாலும் அது வெற்றியளக்கவில்லை.
நாடாளுமன்ற அரசியலில் இல்லாவிட்டாலும் இன்னும் ஐந்து வருடங்கள்வரை அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளேன்.
தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு ஆதரவு வழங்கப்படும். தவறான வழியில் அரசு பயணித்தால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.’’ – என்றார்.










