” பீல்ட் மார்ஷல்’ பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும்.” – என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பீல்ட்மார்ஷல்’ பதவி இராணுவத்தின் உயர் பதவியாகும். அந்த பதவியை வகிப்பவருக்கு அரச சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது .எனவே, மக்களுக்கு பொன்சேகா சேவையாற்ற வேண்டும்.
நல்லாட்சி அரசு போர்க்குற்றம் தொடர்பில் படையினரை காட்டிக்கொடுத்தது. அப்போது பொன்சேகா மௌனம் காத்தார்.” – என்றார்.
பொன்சேகாவுக்கும், சரத் வீரசேகரவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் தொடர் சொற்போர் நீடித்துவருகின்றது.
இந்நிலையில் நேற்று பொன்சேகா ஆற்றிய உரை மற்றும் இன்று சரத் வீரசேகர ஆற்றிய உரைகளில் இருந்து பொருத்தமற்ற விடயங்களை நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.










