‘பொருளாதார சீரழிவுக்கு போராட்டக்காரர்களே பொறுப்பு கூற வேண்டுமாம்’

“மிக வேகமாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்கள் எனப்படுபவர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் இன்று தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே இந்தப் பொருளாதார அழிவுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த அரசின் போது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்துத் திட்டங்களும் கொரோனாத் தொற்று மற்றும் ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles