கண்டி போகம்பறை பழைய சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் உள்ள கைதிகளில் மேலும் 181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பழைய சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 363 கைதிகளுக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டியிலுள்ள பழைய சிறைச்சாலையானது, தற்பொழுது தனிமைப்படுத்தும் நிலையமாக சிறைச்சாலைத் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கைதிகள் மாத்திரமே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரிக்கு கடந்த வார இறுதியில் கொவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவர், தெல்தெனியவிலுள்ள கொவிட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மேற்படி கைதிகளை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்ப சிறைச்சாலை திணைக்களம் தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் மேலும் குறித்த பழைய சிறைச்சாலையில் சுமார் 300 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.










