போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர் 5 இலட்சம் ரூபா பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.










