போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்தார் எனக் கூறப்படும் அநுராதபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார் என தெரியவந்துள்ளது. விற்பனைக்காக வைத்திருந்த ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியையும், அவரின் கணவரும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.