போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூன்று சந்தேக நபர்கள் கம்பளை பொலிஸாரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் டுபாய் இஷார என்பவரின் போதைப்பொருளை இலங்கையில் விநியோகிக்கும் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 முதல் 22 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு சிக்கியுள்ளனர்.
கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொழுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று இவர்கள் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கம்;பளை தொழுவ பகுதியில் வைத்து இருவரும், மஹர பகுதியில் வைத்து மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கம்பளை அங்கம்ம, கவல்வல ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள், கொழும்பில் இருந்து போதைப்பொருளை பெற்றுள்ளனர் என தெரியவருகின்றது.
கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
க.யோகா










