லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான 1990 அவசர அம்புலன்ஸ் வாகனத்தின் சாரதி நேற்று இரவு மது போதையில் இருந்ததாக பிரதேச மக்கள் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து லிந்துலை பொலிஸார், சம்பவம் தொடர்பில் சாரதிக்கு தொலைபேசி அழைப்புகளை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திய போதிலும் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வழங்கி வந்துள்ளார்.
அதன்பின்னர் குறித்த நபர் மதுபோதையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, அவரை கைது செய்த பொலிஸார், இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கௌசல்யா .S
