தோட்டப்பகுதிகளுக்குள் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி வெளியார் உட்புகுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு இந்த தோட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி இருப்பதாகக் கூறிக்கொண்டு நேற்று ( 22 ஆம் திகதி) அந்த தோட்டத்திற்கு ராணுவத்துடன் அத்துமீறி நுழைந்து தேயிலை செடிகளை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளார்.இதற்கு தோட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே தோட்டப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால்
மக்களோடு இணைந்து போராட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.எனவே இந்தச் சம்பவத்துக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றும் திகாம்பரம் கூறினார்.