ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
“ விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உள்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது.
ஹார்முஸ் நீரிணையை மூடும் பட்சத்தில் அவர்கள் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும்.
நாம் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம், அவர்கள் ஏதாவது செய்தால் கூட, அவர்களாலோ அல்லது அவர்களுக்கு உதவும் வேறு யாராலோ உலகின் அந்தப் பகுதியை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வருவது குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடுமையாக பதலளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“ போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான். இந்த பிராந்தியத்தின் சமன்பாடுகளும் எதிர்கால நிலையும் இப்போது நமது ஆயுத படைகளின் கைகளில் உள்ளன, அமெரிக்கப் படைகள் போரை முடிவுக்குக் கொண்டுவராது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.










