‘போர்பதற்றம் அதிகரிப்பு’ – அவசரமாக கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு சபை

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் இனி டுனெட்ஸ், லுகன்ஸ் நகரங்கள் பிரச்சினைக்குரிய பகுதியாக இல்லாமல் தனி நகரங்களாக அழைக்கப்பட்டு, அதன் தலைவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா, உக்ரைன் மெக்சிகோ மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் உக்ரைனில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உக்ரைன்- ரஷியா விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து இந்தியாவும் அறிக்கையை வெளியிடும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles