மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த – அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை!

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல சாசனாரதன தேரர் எச்சரித்துள்ளார்.

கண்டி -மடவலயில் உள்ள ஜனமங்கலராமய அனைத்துலக பௌத்த மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும், நாட்டின் வரலாற்றில் எந்த அரசியல் தலைவரும் பௌத்த மதகுருமார்களை இவ்வளவு அவமதித்ததில்லை.

அநீதி, ஊழல் மற்றும் சட்ட மீறல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் வரலாற்று ரீதியாக குரல் கொடுத்துள்ளனர்.

தவறுகளை சவால் செய்ய மதகுருமார்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது.

அமைச்சர் லால்காந்த தனது கருத்துக்களை விரைவாக மீளப்பெற வேண்டும்.

ஜனாதிபதி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் , அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டின் உறுதித்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்.

இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால், பொதுமக்களின் எதிர்வினை தவிர்க்க முடியாதது.

நாட்டின் கலாசார மற்றும் மத விழுமியங்களுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles