மரக்கறி விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை: நுவரெலியா விவசாயிகள் கவலை

மரக்கறி விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை: நுவரெலியா விவசாயிகள் கவலை

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இந்த விலை வீழ்ச்சியினால், பயிர்ச்செய்கைக்கு, செலவு செய்த பணத்தைக்கூட மீளப்பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,

நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்டப் பகுதிகளில், லீக்ஸ், கரட், ,பீட்ரூட் ஆகிய மரக்கறிகளே, அதிகம் பயிரிடப்படுகின்றன.

இவ்வாறு பயிரடப்படும் மரக்கறிகள் லீக்ஸ்(120)கரட்,(150)பீட்ரூட் (160)மிகக் குறைந்த விலைக்கே விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றன.

இதனால், பயிர்களுக்காக செலவு செய்யும் உற்பத்திக்கான செலவினத்தைகூட பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

லீக்ஸ் கன்று ஒன்றின் விலை ஒரு ரூபாயாகும். அதனை நடுகை செய்து பராமரிக்க பத்து ரூபாய்க்கு மேலதிகமாக செலவளிக்க வேண்டியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது. எனவே, விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்ற நல்லாட்சி அரசாங்கம், நுவரெலியா மற்றும் வெலிமடை போன்ற பகுதிகளின் விவசாயிகள் மீது, கரிசனைக்காட்ட வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

வி.தீபன்ராஜ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles