பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தில் வேன் மோதி, பெண் தோட்டத் தொழிலாளியொருவர் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நகரம் நோக்கி பயணித்த வேனொன்று, சாரதியின் கட்டுப்பாட்டைமீறி , மேற்படி தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது கொழுந்து மடுவத்துக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் தோட்டத்தொழிலாளிமீது வேன் மோதியதில், அவர் படுகாயம் அடைந்தார்.
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள வேன் சாரதியை இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










