மகேஸ்வர குருக்களுக்கு தேசபிமானி விருது!

 

இறம்பொடை, கிளன்லொட்ஜ் ஸ்ரீ ஞானவரதர் ஐயப்ப ஆலய குருக்கள் மகேஸ்வர குருக்களுக்கு சமூக சேவைக்கான தேசபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் அகில இலங்கை சமூக,கலாச்சார சுற்றுப்புறச்சூழல் அதிகார சபை ஊடாக இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

இவரின் சமூக சேவையையும் ஆன்மீக சேவையையும் கருத்திற்கொண்டு இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles