நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் கடும் மழை பெய்யுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மிமீவரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பலத்த மின்னல் தாக்கம் குறித்து மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.