மக்களே அவதானம்! PHI சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

” சமூகத்தில் எந்த இடத்திலும் கொவிட் – 19 தொற்றாளர்கள் இருக்கக்கூடும். எனவே, வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.” – என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

” நாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. நாளாந்த நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்பவர்கள் அவதானமாகவே இருக்கவேண்டும். சமூகத்தில் எந்த இடத்திலும் தொற்றாளர்கள் இருக்கக்கூடும். அவர்களுடன் பழகுவதன் ஊடாக உங்களுக்கும் தொற்று ஏற்படலாம். எனவே, சுகாதார நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை உரிய வகையில் பின்பற்றுமாறு கேட்கின்றோம்.

அநாவசியமான முறையில் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும்.” – என்றும் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles