‘மக்கள் ஆசியுடன் ஆட்சியைக் கவிழ்ப்போம்’ -சஜித் சூளுரை

” டீல் அரசியலுக்கு இடமில்லை, மக்கள் ஆசியுடன்தான் ஆட்சியைக் கவிழ்ப்போம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்று தருகின்றோம், ஆட்சியை முன்னெடுங்கள் என சிலர் இன்று கூறுகின்றனர். எமக்கு ‘டீல்’ அரசில் தேவையில்லை. மக்கள் ஆணைமூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்.

இந்த நாட்டை மொட்டு கட்சிதான் சீரழித்துள்ளது. இந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போராடுவோம். எதிர்காலத்திலும் போராட்டங்கள் தொடரும்.” என்றும் சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles