” தேர்தல் ஊடாக மக்கள் எம்மை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மஹிந்த ராஜபக்சதான் போரை முடித்தார். அவரை மறக்க முடியாது. எனவே, அமைச்சு பதவிகளுக்காக கட்சி மாறுபவர்கள் உள்ளனர். நாம் அப்படியானவர்கள் அல்லர்.” – எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
