” எமது அணி அரசியல் சூழ்ச்சி செய்யவில்லை. மக்கள் பக்கம்நின்று, மனசாட்சியின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். அது அரசியல் சூழ்ச்சி கிடையாது. நான் ஜனாதிபதியாகி இருந்தால், சர்வக்கட்சி அரசு அமைந்திருக்கும். நிச்சயம் மாற்றம் வந்திருக்கும்.
எண் கணித அடிப்படையில் நான் தோற்றிருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியில் தோற்கவில்லை. மக்கள் எம் பக்கமே நிற்கின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை ஏற்கமுடியாது. அதனால்தான் எதிர்த்து வாக்களித்தோம்.” எனவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
