சௌபாக்கியா வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக அம்பகமுவ பிரதேச செயலகத்தின் மவுசாகலை 320I கிராம சேவகர் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள மவுசாகலை விவசாய அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக வீட்டு தோட்ட பயனாளர்களின் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சுமார் 500 மஞ்சள் கன்றுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினரும் மவுசாகலை விவசாய அபிவிருத்தி சங்க தலைவருமான M.P.ஆனந்தன், மவுசாகலை பிரிவின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அஜித் ஊடகவியலாளர் K.R. ஹெலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மஞ்சளின் தட்டுபாடு மற்றும் விலையேற்றம் காரணமாக மஞ்சள் உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்தும் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெளிவூட்டப்பட்டது.
வீட்டுத் தோட்டத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பயனாளிகளுக்கு இது பெரிதும் பயனளிப்பதாக கூறி பயனாளிகள் விசேட நன்றிகளையும் தெரிவித்தனர்.
ரொமேஸ் தர்மசீலன்.
மஸ்கெலியா.