‘மடக்கும்புரயில் இளம் குடும்பஸ்தர் கொலை’ – தலைமறைவான சந்தேகநபர் கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர, வடக்கிமலை தோட்டத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு குடும்பங்களுக்கு இடையில் பணக் கொடுக்கல், வாங்கலினால் ஏற்பட்ட முறுகலில் 30 வயதுடைய குடும்பஸ்தர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன், கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் 04 நாட்களின் பின்னர் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரவித்தனர்.

சந்தேகநபர் இன்று (10) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles