மடுல்சீமை, குடுதோவ பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பசுவை திருடி விற்றதாகக் சந்தேகிக்கப்படும் நபரொருவர், நேற்று மதியம் கைது செய்யப்பட்டதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மடுல்சீமை ஊவா கல பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடு காணாமல் போனதாக பசுவின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, விசாரணைகளின் போது உறவினரான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, பசுமாட்டை திருடி லுணுகலை பகுதியில் உள்ள ஒருவருக்கு 95,000 ரூபாய்க்கு விற்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அதன்படி, சந்தேக நபருடன் அந்தப் பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் பசுவை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண, உதவி பொலிஸ் அத்தியட்சகர் வேஹித தேசப்பிரிய ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மடுல்சீமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.பி. திசாநாயக்க தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனராஜா டிமேஷன்










